இரட்டைக் குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொன்ற கொடூரத்தாய்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டத்தில் குழந்தைகள் தனக்குப் பிறக்கவில்லை என கணவர் கூறியதால் ஆத்திரமடைந்த மனைவி, புதிதாகப் பிறந்த இரட்டைக் குழந்தைகளின் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. சவுதி அரேபியாவில் பணிபுரியும் நபர் நீண்ட நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார். அப்போது மனைவி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்திருந்ததால், அவர் நேராக காவல்நிலையம் சென்று, குழந்தைகள் முறைகேடான உறவில் பிறந்ததாக புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தச் சென்ற போது அந்தப் பெண் தனது இரட்டைக் குழந்தைகளையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்திருந்தார். இதையடுத்து அவரைக் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

varient
Night
Day