இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் - முக்கிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று தொடங்க உள்ளது.

நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு சபைகளின் உறுப்பினர்கள் கொண்ட கூட்டுக்‍ கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று உரையாற்ற உள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதமே உள்ளதால் நாளை பிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்தவகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  6-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்களை எழுப்பி புயலை கிளப்ப எதிர்க்‍கட்சிகள் தயாராகி வருகின்றன.

Night
Day