எழுத்தின் அளவு: அ+ அ- அ
தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவினர் தொடர்ந்து விதிமுறைகளை மீறுவதும், இதனால் அவர்கள் மீது மக்கள் அதிருப்தி அடைந்துவருவதும் தொடர்கதையாகி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்கு மிக அருகே அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் ஒட்டப்பட்ட காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி போஸ்டர்கள் அகற்றப்படாமல் இருப்பதால் மற்ற அரசியல் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலங்குடி பேருந்து நிலையச் சுவர்களில், ஒட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான போஸ்டர்களை அகற்றக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு இணைய வழியில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சியினர் புகார் அளித்திருந்தனர். அந்த புகாருக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், அந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டு விட்டதாக கூறி இருந்தது. ஆனால் அந்த போஸ்டர்கள் அகற்றப்படாமல் உள்ளதால் மற்ற கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.