எழுத்தின் அளவு: அ+ அ- அ
அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற ஜூன் 2 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவைகளுக்கு வருகிற ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் பதிவான வாக்கு எண்ணிக்கை வருகிற ஜூன் மாதம் 4 ஆம் தேதி நடைபெறும் என்று முன்பு தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இரு மாநிலங்களின் நடப்பு சட்டப்பேரவை காலம் வருகிற ஜூன் 2 ஆம்தேதி முடிவடைவதால் அதே நாளில் வாக்கு எண்ணிக்கை நடத்தி தேரதல் பணிகள் அன்றே முடிவடையும் என்று இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் சஞ்சீவ் குமார் பிரசாத் செய்திக் குறிப்பு ஒன்றில்
தெரிவித்துள்ளார். இரு மாநிலங்களின் மக்களவை தேர்தல் தேதி வாக்கு எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை.