அயோத்தி ராமர் கோயிலில் கெஜ்ரிவால், பகவந்த் மான் சாமி தரிசனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சாமி தரிசனம் செய்தனர். கடந்த மாதம் 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் வெகு விமரிசையாக திறக்கப்பட்டது. இதையடுத்து, நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் அறக்கட்டளை சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர், கோயில் முன்பாக இருவரும் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

Night
Day