அம்பேத்கர் குறித்து பேச்சு - அமித்ஷா விளக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜகவினர் அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்றுவதாகவும், காங்கிரஸை போல் அம்பேத்கரை விமர்சித்தவர்கள் வேறு யாரும் கிடையாது என்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி,  எதிர்கட்சி எம்.பி.க்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அம்பேத்கர் குறித்த சர்ச்சை பேச்சுக்கு அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என  எதிர்கட்சி தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசியல் சாசனம் குறித்து விவாதம் நடத்த தங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், காங்கிரஸை போன்று அம்பேத்கரை விமர்சித்தவர்கள் வேறு யாரும் கிடையாது என்றும் கூறினார். 

தனது பேச்சின் ஒரு பகுதியை மட்டுமே வைத்து விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறிய அவர், அம்பேத்கருக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்கு கூட ஒப்புதல் தராதவர் தான் நேரு என்றும் விமர்சித்தார்.

அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க நேருவும், இந்திரா காந்தியும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும்,  அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்தி பிடிப்பது பிரதமர் மோடி அரசு தான் என்றும் அமித்ஷா பெருமிதத்துடன் தெரிவித்தார். 

பாஜக அம்பேத்கருக்கு எதிரான கட்சி அல்ல என்றும், அம்பேத்கர் பிறந்த ஊரில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்க காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

varient
Night
Day