அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் ED சோதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

SBI வங்கி பண முறைகேடு தொடர்புடைய வழக்குகளில் மும்மையில் உள்ள பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் வீடு மற்றும் நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ரிலையன்ஸ் குரூப் தலைவர் அனில் அம்பானியின் நிறுவனங்கள் எஸ் வங்கியிடம் இருந்து 12 ஆயிரத்து 800 கோடி கடனாக பணம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதற்கான வட்டி தொகையை செலுத்தவில்லை என S வங்கி குற்றசாட்டியது. மேலும், தொழிலதிபர் அனில் அம்பானி ஒரு மோசடி நபர் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தது. வட்டி மற்றும் அசல் தொகையை திருப்பி செலுத்துவதில் மோசடி தொடர்பாக அமலாக்க துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மும்பையில் உள்ள தொழிலதிபர் அனில் அம்பானியின் வீடு மற்றும் நிறுவனம் உள்பட 35 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

Night
Day