'CAA அமலாக 4 ஆண்டு காலம் தாமதமானதற்கு கொரோனாவே காரணம்' - மத்திய உள்துறை விளக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக 4 ஆண்டு காலம் தாமதமானதற்கு கொரோனா பெருந்தொற்றே காரணம் என மத்திய உள்துறை விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு 2019 டிசம்பர் 12-ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இச்சட்டத்தில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி 2019, டிசம்பரில் போராட்டம் வெடித்தது. தொடர்ந்து 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவியது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று சட்டம் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day