'முதல்வர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவாற்ற செல்வதில் எங்களுக்கு பெருமை' - மேற்குவங்க ஆளுநர்

எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவு ஆற்றச்செல்வது பெருமைக்குரியது என்று அம்மாநில ஆளுநர் ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார்.

நாளை லண்டன் செல்லும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இந்திய தூதரகத்தால் நடத்தப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து வர்த்தகர்களை சந்திக்‍கும் அவர், வருகிற 27ம் தேதி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற உள்ளார். கடந்த 2015ம் ஆண்டுக்‍குப்பிறகு, மம்தா பானர்ஜி பிரிட்டன்செல்வது இது இரண்டாவது முறையாகும் . இது குறித்து கொல்கத்தாவில் நடைபெற்ற சிஐஐ கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் பேசிய அம்மாநில ஆளுநர் ஆனந்தபோஸ், மேற்கு வங்க முதலமைச்சர் ஆக்ஸ்போர்டுக்குச் செல்வதில் தாங்கள் பெருமைப்படுகிறோம் என்று தெரிவித்தார். 

Night
Day