'மக்கள் அடிப்படை வசதிகளை பெறுவதில் உள்ள சிக்கல்களை களைந்திடுக' - காவலில் உள்ள கெஜ்ரிவால் டெல்லி அமைச்சருக்கு கடிதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நீர்வளத்துறை அமைச்சருக்கு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், டெல்லியில் பல்வேறு பகுதிகளில் மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டு, கழிவுநீர் தேக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்படுவது தனது கவனத்துக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உடனடியாக தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் மக்களக்கு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறும், தான் சிறையில் இருக்கும் இந்த நேரத்தில் அடிப்படை வசதிகளை பெறுவதில், டெல்லி மக்களுக்கு எந்த சிரமமும் ஏற்பட்டு விடக்கூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளார். இக்கட்டான சூழலிலும் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களை பற்றியே சிந்திப்பதாக டெல்லி அமைச்சர் அதிஷி நெகிழ்ச்சி தெரிவித்தார். 

varient
Night
Day