"செங்கோல் நிகழ்ச்சி எப்போதும் நினைவில் இருக்கும்" - பிரதமர் மோடி

எழுத்தின் அளவு: அ+ அ-

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி மக்களவையில் பதிலுரை ஆற்றினார். அப்போது காங்கிரஸ் கட்சி மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்ததுடன், காங்கிரஸ் முன்னாள் தலைவர்களை கடுமையாக சாடினார்.
 
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி மக்களவையில் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தில் உரையாற்ற வந்தபோது செங்கோல் மரியாதை வழங்கப்பட்டு அவருக்கு பின்னால் நடந்து வந்தது, சுதந்திரம் அடைந்த இந்தியாவின் புதிய பாரம்பரிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மாண்பு உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் ஒட்டு மொத்த நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு தேவையான பட்ஜெட்டாக இருந்ததாக பிரதமர் மோடி பாராட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தேர்தலில் போட்டியிடும் சக்தியே எதிர்கட்சிகளுக்கு இல்லை என்பதால் அவர்கள் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என தெரிவித்தார். நீண்ட காலம் எதிர்காட்சியாகவே இருக்க வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் உறுதியை பாராட்டுவதாகவும் பிரதமர் கிண்டல் செய்தார். மேலும், எதிர்காட்சியாகவே காலத்துக்கும் இருக்க மக்கள் உங்களுக்கு ஆசிர்வாதம் வழங்குவார்கள் என்றும் நாட்டுக்கு மிகச்சிறந்த எதிர்க்கட்சி தேவை என்பது தான் எப்போதும் தனது கருத்து என்றும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகிச்செல்வதாகவும் விமர்சனம் செய்தார். 

பிரதமர் மோடியின் உரையை கேட்டு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். கடும் அமளியை தொடர்ந்து சில மணிதுளிகள் பேச்சை நிறுத்திய பிரதமர், பின் பேச்சை தொடர்ந்தார். காங்கிரஸ் கட்சியின் ஆமை வேகத்துக்கு யாரும் போட்டியில்லை என்றும், காங்கிரஸ் கட்சி, வேறு எந்த ஒரு கட்சிகளின் தலைவர்களையும் வளர விடவில்லை என பிரதமர் கூறினார். தங்களது கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களை காங்கிரஸ் ஒடுக்குவதாக கூறிய பிரதமர், சமூகத்தில் பிளவை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாகவும்,  காங்கிரஸ் கட்சி என்ற ஒரு குடும்பத்தால் நாட்டிற்கு பாதிப்பு  என்றும்  பிரதமர் மோடி குற்றச்சாட்டினார்.
 
தங்களது குடும்பத்தை தாண்டி வேறு எதைப் பற்றியும் காங்கிரசுக்கு கவலை இல்லை என்றும் காங்கிரஸ் கட்சி குடும்பவாத அரசியல் செய்வதாகவும் சாடினார்.  அடுத்த தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்  என்பதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்த பிரதமர்,  ஒரே ஒரு குடும்பம் மட்டுமே ஆட்சி செய்வது நாட்டிற்கு நல்லது கிடையாது என்றும் பிரதமர் மோடி விமர்சனம் செய்தார். 2014ல் உலக அளவில் பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இந்தியா இருந்தது. அடுத்த 30 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் 3வது இடத்தை இந்தியா பிடிக்கும் என 2014ல் காங்கிரஸ் கூறியது. ஆனால் 30 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 3வது முறையாக பொறுப்பேற்று செய்து முடிக்க உள்ளதாகவும் பிரதமர் மொடி பெருமிதம் தெரிவித்தார்.
 
 பாஜக ஆட்சி செய்ததை காங்கிரஸ் செய்வதற்கு 100 ஆண்டுகள் தேவைப்படும் என்றும் காங்கிரசின் மனநிலையால் இந்திய நாடு கடுமையான பாதிப்புகளை சந்தித்ததுள்ளதாக சாடினார். பிரதமர் பிரதமரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அவ்வப்போது முழக்கமிட்டனர். இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசிய பிரதமர்,  பாஜக ஆட்சியில் 17 கோடி குடும்பங்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டது என்றும்  பாஜக ஆட்சியில் 4 கோடி குடும்பங்களுக்கு இலவச வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இந்தியர்களை சோம்பேறிகள் என முன்னாள் பிரதமர் நேரு நினைத்தார் என்றும்  இந்தியாவை விட பிற நாடுகளைத் தான் நேரு அதிகம் பாராட்டினார் என்றும் குற்றம் சாட்டினார். இந்தியர்களை முன்னாள் பிரதமர் நேரு நம்பவில்லை என பிரதமர் மோடி தாக்கினார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும் இந்தியர்களை சரியாக மதிப்பிடவில்லை என்றும், இந்திய மக்களை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பாராட்டியதில்லைஎனவும் மோடி விமர்சனம் செய்தார்.பிரதமர் மோடி கடினமான சூழல்களைக் கண்டு இந்தியர்கள் ஓடி ஒளிவதாக இந்திராகாந்தி கூறினார். 

இந்தியா கூட்டணி தற்போது ஆட்டம் கண்டு விட்டதாக பிரதமர் விமர்சனம் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை மக்கள் எப்படி நம்புவார்கள் என கேள்வி எழுப்பிய மோடி, காலனியாதிக்க சட்டங்களை பாஜக ஆட்சியில் ஒழித்தோம் எனவும், மோடி ஜம்மு காஷ்மீர் நலனுக்காக சட்டப்பிரிவு 370ஐ நீக்கினோம் என்றும், நேரு செய்த தவறால் ஜம்மு காஷ்மீர் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர் என்று பிரதமர் மோடி வேதனை தெரிவித்ததார்.  அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதை சுட்டிக் காட்டி பேசிய  பிரதமர்  அடுத்த தேர்தலில் 370 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்றும் பிரதமர் உறுதி கூறினார். 

மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் போது மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் அடுத்த முறை மீண்டும் ஆட்சி அமைத்து ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித்தளத்தை அமைப்போம் என சூளுரைத்தார்.  கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளதாகவும்,  ஓபிசி தலைவர்களை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாகவும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.விவசாயிகளின் நம்பிக்கையை உடைத்தது காங்கிரஸ் கட்சி தான் - பிரதமர் மோடி பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன டிஜிட்டல் பொருளாதாரத்தில் உலக நாடுகளுக்கு முன்னணியில் உள்ளதாகவும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பணவீக்கம் இரட்டிப்பாக இருந்ததாக கூறிய பிரதமர், குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் பணம் அதிகமாக இருந்தது என பிரதமர் மோடி விமர்சனம் செய்தார்.

அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஊழலை எதிர்க்கும் அமலாக்கத்துறையின் நடவடிக்கையைக் கண்டு எதிர்க்கட்சிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும்  மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் ஊழலை ஒழிக்க பாடுபடுகின்றன என்றும்  ஊழல் செய்து சம்பாதித்த பணத்தை மீட்ட போது அதை பார்த்து ஒட்டுமொத்த நாடும் மலைத்து நின்றதுஎனவும் பிரதமர் கூறினார். தவறு செய்தவர்கள் யார் என்பதை நீதிமன்றங்கள் முடிவு செய்யும் என்றும் பாஜக ஆட்சியில் விசாரணை அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுகின்றனஎனவும் கூறினார்.ர்  ஊழல் செய்த யாரும் தப்ப முடியாது என கூறிய பிரதமர்   ஊழல் செய்து சம்பாதித்த பணம் அனைத்தும் மீட்கப்படும் என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார்.   

Night
Day