விவேகானந்தர் பாறையில் 2-வது நாள் தியானத்தைத் தொடங்கினார் பிரதமர்

எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்தில் காவி உடைய அணிந்து கையில் ருத்ராட்ச மாலையுடன் மந்திரங்களை உச்சரித்தபடி பிரதமர் மோடி 2ம் நாள் தியானத்தை மேற்கொண்டு வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவடையும் நேரத்தில் ஆன்மிகத் தலங்களுக்கு சென்று தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ள பிரதமர் மோடி, இந்தமுறை தியானம் மேற்கொள்ள கன்னியாகுமரி வந்துள்ளார். நேற்று பகவதி அம்மன் கோயிலில் முதலில் சாமி தரசினம் செய்த பிரதமர் மோடி அதன்பின்னர் விவேகானந்தர் சிலை அமைந்துள்ள பகுதியை பார்வையிட்டார். அதன்பின்னர் தியான மண்டபத்தில் தியானத்தில் அமர்ந்த பிரதமர் மோடி 5 மணி நேரம் தொடர் தியானத்தில் ஈடுபட்டார். 2ம் நாளான இன்று விவேகானந்தர் பாறையில் இருந்து சூரிய உதயத்தை தரிசித்தார் பிரதமர் மோடி. அதனை தொடர்ந்து 2ஆம் நாளாக தியானத்தில் அமர்ந்தார். 

தொடர்ந்து, பிரதமர் மோடி தியானம் மேற்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. காவி உடைய அணிந்து கையில் ருத்ராட்ச மாலையுடன் மந்திரங்களை உச்சரித்தபடி பிரதமர் மோடி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு வருகிறார். கடும் விரதத்தை கடைபிடித்து பிரதமர் மோடி தொடர் தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.  

ஓய்வு நேரத்தில், இளநீர் மற்றும் பழச்சாறு மட்டுமே பிரதமர் மோடி அருந்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் விரதத்தை கடைபிடித்தள்ள பிரதமர் மோடி நாளை பிற்பகல் வரை தொடர் தியானத்தில் ஈடுபட உள்ளார். இதனிடையே பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்காக விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை திரும்ப பெறப்பட்டுள்ளது. செல்போன், பைகள் உள்ளிட்டவைகள் இன்றி விவேகானந்தர் பாறையை சுற்றிப்பார்க்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மோடி தியானம் செய்யும் மண்டபத்திற்கு மட்டும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


Night
Day