பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற சித்திரை பெருவிழா, பொன் ஏறு பூட்டும் விழா

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற சித்திரை பெருவிழா, பொன் ஏறு பூட்டும் விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் ஆயக்காரன்புலத்தில் கலிதீர்த்த ஐய்யனார் கோவிலில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு தங்ககுதிரை எழுந்தருளும் திருவிழா நடைபெற்றது. செல்லியம்மன் கோவிலிலிருந்து ஐய்யனாரின் வாகனமான தங்ககுதிரை எழுந்தருளி முக்கிய சாலைகள் வழியாக கலிதீர்த்த ஐய்யனார் கோவிலை வந்தடைந்தது. தங்க குதிரைக்கு வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலைகளை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வேடந்தவாடி கிராமத்தில் கூத்தாண்டவர் கோவிலில் ஸ்ரீ பாஞ்சாலி அம்மன் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து வாண வேடிக்கையுடன் நடைபெற்ற சாமி வீதி உலா நிகழ்ச்சியிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புற்றடி மாரியம்மன் கோயிலில் குரோதி வருட பிறப்பை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக மாரியம்மனுக்கு பல்வேறு வகையான வாசனை திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திரளான பெண்கள் பங்கேற்று குத்து விளக்கேற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்தனர்.

Night
Day