இலங்கை: ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்திர சித்திரை தேர்த்திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள நுவரெலியா மாவட்டம் ஹட்டனில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்திர சித்திரை தேர்த்திருவிழா மிக கோலாகலமாக நடைபெற்றது. விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு ஏனைய விசேஷ பூஜைகள் உட்பட ஆலயத்தை சுற்றி ஊர்மக்கள் பொங்கல் வைத்தனர். இதனை தொடர்ந்து பால்குடம், பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

varient
Night
Day