ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. கவுகாத்தியில் உள்ள அசாம் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்ற 65-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்சுடன் மோதியது. அதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 145 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் வீரர்கள் ரூசோ 22 ரன்களும், சஷாங் சிங் ரன் ஏதும் எடுக்காமலும், வெளியேறினர். பின்னர் அடுத்ததாக களமிறங்கிய வீரர்கள் நிதானமாக ஆடி, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 

Night
Day