ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வரும் 19ம் தேதி தொடங்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அவர் இடம் பெற்றிருந்த நிலையில் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். இது எளிதான முடிவு அல்ல என்றும் தமது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தில் முழுமையாக கவனம் செலுத்த இது சரியான நேரம் என்றும் ஓய்வு தொடர்பாக ஸ்டாய்னிஸ் கூறியுள்ளார். இதுவரை 71 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டாய்னிஸ் ஆயிரத்து  495 ரன்களையும் 48 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

Night
Day