அக். 3-ம் தேதி தொடங்கும் மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்‍கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. 9-வது மகளிர் 20 ஓவர் உலகக்‍கோப்பை கிரிக்‍கெட் தொடர் பங்களாதேஷில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் வரும் அக்‍டோபர் 3-ம் தேதி தொடங்கி, 17, 18 ஆகிய தேதிகளில் அரையிறுதி போட்டிகளும், இறுதிப்போட்டி அக்‍டோபர் 20-ம் தேதியும் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 23 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. பங்களாதேஷில் டாக்‍காவிலும் வடகிழக்‍கில் உள்ள சில்ஹெட் நகரிலும் இப்போட்டிகள் நடைபெற உள்ளன. அக்டோபர் 6ம் தேதி பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த தொடரில் குரூப் 'ஏ' பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளும், குரூப் 'பி' பிரிவில் தென் ஆப்ரிக்‍கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ் அணிகள் உள்ளன. 

Night
Day