CM-ஏ வந்தாலும் ஃபேஸ் பண்ணுவேன்... - உச்சகட்ட போதையில் அலப்பறை...

எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தலைக்கேரிய மது போதையில் இளைஞர் ஒருவர் அரசு பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து எரிந்து அலப்பறையில் ஈடுபட்டு, பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

பாக்குறதுக்கு தான் சுள்ளான், சூடானே சுலுக்கு எடுத்திடுவேன் என நடிகர் தனுஷ் திரைப்படத்தில் ஆவேசமாக .பேசுவது போல, தலைக்கேரிய போதையில் ஒருவர் ராசிபுரம் பேருந்து நிலையத்தில் செய்த அட்ராசிட்டிகளின் காட்சிகள் தான் இவை....

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 52 எல்.எஸ்.எஸ். பேருந்து சேலம் செல்வதற்காக தயார் நிலையில் இருந்தது. பேருந்தின் ஓட்டுநரும், நடத்துனரும் பேருந்தில் உணவருந்தி கொண்டு இருந்துள்ளனர். அப்போது, அங்கு இருந்த டீக்கடையில் புல் போதையில் இருந்த பிள்ளாநல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞர் மணி என்பவர் சிகரெட் ஒன்றை இழுத்து விட்டு, நேராக 52 எல்.எஸ்.எஸ். பேருந்துக்குள் சென்று, உணவருந்தி கொண்டிருந்த பேருந்தின் ஓட்டுநரிடம் சென்று எங்கே எனது செல்போன் என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, திடீரென பேருந்தின் ஓட்டுநரை கழுத்தை பிடித்து தாக்கியதோடு, அரசு பேருந்தின் கண்ணாடியை கையால் குத்தி உடைத்து அட்ராசிட்டி செய்துள்ளார்.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போதை இளைஞர் மணியை பேருந்தின் கீழே வருமாறு அழைத்துள்ளனர். மேலும், இது போல ஈடுபட கூடாது என காவல் உதவி ஆய்வாளர் அறிவுறுத்திய நிலையில், மீண்டும் பாக்குறியா இந்த கண்ணாடியும் உடையும் என்றும், யார் வந்தாலும் விட மாட்டேன் மு.க.ஸ்டாலினே வந்தாலும் நான் பேஸ் பன்னூறேன்னு தெரிவித்து அனைவரையும் அதிரவைத்தார்.

தொடர்ந்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூல் லிப் என்ற குட்கா பொருளை கையில் எடுத்த மதுபிரியர் மணி, காவல் உதவி ஆய்வாளரிடம் தொலைந்து போன தனது செல்போனை கண்டுபிடித்து தருகிறீர்களா? இல்லை நானே கண்டுபிடிக்கவா என கேட்டு அட்டகாசம் செய்தார்.

ஒரு கட்டத்தில் மதுப்பிரியர் மணியின் போதை அட்டகாசத்தை பொறுக்க முடியாமல் காவல் உதவி ஆய்வாளரும், போக்குவரத்து ஊழியர்களும் தரதரவென இழுத்து சென்றனர். 

காவல்நிலையத்திற்கு அழைத்து செல்ல பேருந்து நிலையத்தில் வாகனத்திற்கு காத்திருந்த போது, காவல் உதவி ஆய்வாளரின் சட்டையை பிடித்து 2 ஸ்டார் போட்ட போலீஸ், எஸ்.ஐ.யா இருந்தா என் போன கண்டு பிடித்து இருப்பாரே என்று கூச்சலிட்டார் போதை இளைஞர் மணி..

போதையின் உச்சக்கட்டத்திற்கு சென்ற மணி ராசிபுரத்தில் உள்ள ஒட்டு மொத்த வண்டியையும் கொழுத்துவேன என தெரிவித்தார். அவரை, மெதுவாக வண்டியில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார். செல்போனை தொலைத்த மணி தனது லைப்பை தொலைத்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தோடு இது போன்ற செயல்களில் இனி ஈடுபட கூடாது என கடிதம் எழுதி வாங்கி கொண்டு எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

Night
Day