தமிழகத்தில் 26 கிலோ அரிசி மூட்டை ரூ.100 முதல் ரூ.200 வரை உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் அரிசியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழையால் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்திருந்தது. இதனால் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் நெல் விளைச்சல் குறைந்து காணப்பட்டது. இதனால் ஏற்பட்ட உற்பத்தி பாதிப்பால் தஞ்சை, தூத்துக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரிசி விலை அதிகரித்துள்ளது. கிலோவுக்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை அதிகரித்துள்ள அரிசியின் விலை, தமிழக மக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. 

Night
Day