9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கையும், ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்க துறைமுகங்களிலும் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு திசையில் நகர்ந்து கரையை கடந்தது. ஒடிசாவின் பூரி- கலிங்கப்பட்டினத்திற்கு இடையே கோபால்பூருக்கு அருகே இன்று அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. 

10 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்குத் திசையில் நகர்ந்து தெற்கு ஒடிசா கடலோர பகுதி அருகே மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு திசையில் தெற்கு ஒடிசா மற்றும் சட்டீஸ்கர் நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்தநிலையில், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கையும், ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்க துறைமுகங்களிலும் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Night
Day