24 மணி நேரமும் மதுபான விற்பனை - பொதுமக்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை சிஐடி நகரில் 24 மணி நேரமும் மதுபான விற்பனை நடைபெற்று வருவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

சென்னை சிஐடி நகர் பகுதியில் செயல்படும் மதுக்கடையில் விடிய, விடிய மது விற்பனை நடப்பதால் அந்த பகுதியில் பெண்கள், குழந்தைகள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மதுபாட்டிலை வாங்கி செல்லும் மது பிரியர்கள் குடித்து விட்டு அங்கேயே ரகளையில் ஈடுபடுவதாகவும் மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். பகல் நேரங்களில் விற்பனையாகும் மதுபானங்கள் போல் அனைத்து ரக மதுபானங்களும் 24 மணி நேரமும் கிடைப்பதாகக் கூறும் பொதுமக்கள் டாஸ்மாக் கடை 24 மணி நேரம் செயல்படுவதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சைதாப்பேட்டை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினார். 

Night
Day