2-வது மாடி பால்கனியிலிருந்து தவறி விழுந்த குழந்தை

எழுத்தின் அளவு: அ+ அ-


சென்னையில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த குழந்தை சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.  சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த ஷாநவாஸ் என்பவரின் 2 வயது மகன் மாஸ் என்பவன் வீட்டின் 2-வது மாடியில் உள்ள பால்கனியில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாரதவிதமாக குழந்தை தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, பெற்றோர் உடனடியாக குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் குழந்தை தவறி கிழே விழுந்தது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியது.

Night
Day