ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் மாதவனூர் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணி நடைபெற இருப்பதாக தமிழக அரசின் சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி அளித்தது. இதற்கு விவசாயிகளும், மீனவர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அந்த திட்டம் செயல்படாது என அறிவித்தார். இந்நிலையில் மாதவனூர் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான சோதனை கிணறுகள் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Night
Day