எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திடம் இருந்து ஆயிரத்து 323 கோடி ரூபாய் இழப்பீடு கோரி சன் குழும தலைவர் கலாநிதி மாறன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கலாநிதி மாறனும் கே.ஏ.எல் நிறுவனமும் இணைந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 58.46 சதவீத பங்குகளை அஜய் சிங்குக்கு கைமாற்றப்பட்டுள்ளது. அப்போது செய்து கொண்ட உடன்பாட்டின்படி, ஸ்பைஸ்ஜெட்டிற்காகக் கலாநிதி மாறனும், கேஏஎல் நிறுவனமும் 679 கோடி செலவழித்த நிலையில் அவர்களுக்கு உரிய பங்குகளை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திடம் ஆயிரத்து 323 கோடி ரூபாய் கேட்டு, கலாநிதி மாறன் மற்றும் கேஏஎல் ஏர்வேஸ் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கலாநிதிமாறந் மற்றும் கே ஏ எல் நிறுவனம் இணைந்து சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.