வைகை ஆற்றில் மிதந்த 'உங்களுடன் ஸ்டாலின்' மனுக்கள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் சேகரிக்கப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' எனும் மக்களிடம் மனுக்கள் பெறும் திட்டம் முகாம் துவங்கி அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் சேகரிக்கப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என விளம்பர திமுக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சுற்றுவட்டார பகுதிகளான கீழடி, கொந்தகை, மடப்புரம் ஆகிய 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் சேகரிக்கப்பட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்தது. இதுகுறித்து கார்த்திக் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தங்களின் கோரிக்களை விரைவாக நிறைவேற்றப்படும் என நம்பிக்கையுடன் மக்கள் அளித்த மனுக்கள், அலட்சியத்துடன் ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும், விளம்பர திமுக அரசு மீது அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. மனுக்களை ஆற்றில் வீசி விட்டு செல்வதுதான் 45 நாட்களில் தீர்வு காணும் லட்சணமா என விளம்பர திமுக அரசுக்கு மக்கள் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும், விளம்பர திமுக அரசின் மக்களை ஏமாற்றும் இந்த செயலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

Night
Day