எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாகை மாவட்டம் கோடியக்கரையில் வெளி மாவட்ட மீனவர்களை சிறை பிடித்து வேதாரண்யம் தாலுக்கா மீனவர்கள் தாக்கியதை கண்டித்து 100க்கு மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து 2வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோடியக்கரையில் வெளி மாவட்ட மீனவர்கள் தங்கி மீன்பிடிப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி வேதாரண்யம் தாலுக்கா மீனவர்கள் போராட்டம் நடத்தியநிலையில், மீன்வளத் துறையினர் வெளி மாவட்ட மீனவர்களுக்கு அனுமதி மறுத்தனர். இதனையடுத்து, கோடியக்கரையில் தங்கி மீன்பிடித்த வெளி மாவட்டத்தை சேர்ந்த 10 படகுகளுடன் 35 வெளிமாவட்ட மீனவர்களை வேதாரண்யம் தாலுக்கா மீனவர்கள் சிறைபிடித்து கடுமையாக தாக்கிதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்தும், கோடியக்கரையில் வெளி மாவட்ட மீனவர்களை மீன்பிடிக்க தமிழக அரசு அனுமதிக்க கோரியும், மீனவர்கள், கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.