விஷச்சாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி முதலில் 4 பேர் பலியானதை தொடர்ந்து நாளுக்கு நாள் உயிரிழப்புகள் தொடர்ந்து வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, முண்டியம்பாக்கம் மருத்துவமனை, சேலம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே 59 பேர் உயிரிழந்த நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த சேஷமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சாமுண்டி என்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 150க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

varient
Night
Day