விவசாயிகளின் துயர் துடைத்த அம்மாவின் அரசு... பெருந்துயரில் தள்ளிய விளம்பர திமுக அரசு..

எழுத்தின் அளவு: அ+ அ-

விவசாயிகளுக்காக எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து விவசாயிகள் நலனில் அதீத அக்கறை கொண்டு செயல்பட்டது புரட்சித்தலைவி அம்மாவின் அரசு... ஆனால் இன்றைய திமுக ஆட்சியிலோ விவசாயிகள் கண்ணீர் கடலில் தத்தளிக்கும் நிலை தான் உள்ளது...

விவசாயிகளின் நலனுக்காக மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுவது தான் பயிர் காப்பீட்டு திட்டம்... பருவம் தவறிய மழையால் பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகிப்போவதும்.. கடும் வறட்சியினால் நிலம் பாளம்பாளமாக வெடிப்பதும்... நெற்பயிர்கள் பதராகிப்போவதும்.. என விவசாயிகள் மகசூலில் பேரிழப்பை சந்திக்கும் போதெல்லாம் அவர்களுக்கு கைகொடுப்பது பயிர் காப்பீட்டு திட்டம் தான்...

மத்திய மாநில அரசுகளின் தலா 49 சதவீத பங்களிப்பு மற்றும் விவசாயிகள் தரப்பில் இருந்து 2 சதவீதம் பங்களிப்பின் கீழ் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் துயர் துடைத்தெறியப்பட்டு வந்தது... ஆனால் கடந்த 2014ம் ஆண்டு திருத்தப்பட்ட தேசிய பயிர் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியது அப்போதைய மத்திய அரசு.. இதனால் விவசாயிகள் கட்ட வேண்டிய பிரீமியம் தொகை 2 சதவீதத்தில் இருந்து 4.8 சதவீதம் வரை உயர்ந்தது.. இது விவசாயிகளுக்கு சுமையாக அமைந்ததால் திருத்தப்பட்ட தேசிய பயிர் காப்பீடு திட்டத்தை கடுமையாக எதிர்த்தது புரட்சித்தலைவி அம்மாவின் அரசு... 

அதுமட்டுமின்றி, குறைந்த இழப்பீடு, அதிகக் கட்டணம் என்ற அடிப்படையில் தேசிய பயிர் காப்பீடு திட்டம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அப்போதைய முதலமைச்சர்  மாண்புமிகு அம்மா, பழைய பயிர்க் காப்பீட்டுத் திட்டமான தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டமே நடைமுறைப்படுத்தப்படும் என அதிரடியாக அறிவித்தார். அதன்படி கடந்த 2014-ம் ஆண்டு சம்பா, தாளடி, பிசானம் பருவத்தில் பயிரிடப்படும் நெல் மற்றும் ரபி பருவத்தில் பயிரிடப்படும் இதர பயிர்களுக்கு புதிய தேசிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்குப் பதிலாக பழைய பயிர்க் காப்பீட்டுத் திட்டமான தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டமே நடைமுறைப்படுத்தப்படும் எனது அறிவித்தது புரட்சித்தலைவி அம்மாவின் அரசு.. 

ஆனாலும் விவசாயிகள் இழப்பீடு பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததுடன் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டதால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்களின் துயரை துடைக்க, இடுபொருள் நிவாரணம் என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது புரட்சித்தலைவி அம்மாவின் அரசு. அதன்படி சம்பா, தாளடி பருவத்தில், பருவம் தவறி பெய்த கனமழை மற்றும் புயல் பாதிப்பால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் பொருட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணங்களை வழங்கியது புரட்சித்தலைவி அம்மாவின் அரசு... குறுவை சம்பா என இரு பருவங்களிலும் விவசாயிகள் இழப்பை எதிர்கொண்டாலும் சரி... வெள்ளம்.. கனமழை.. போன்ற பாதிப்புகளை சந்தித்தாலும் சரி புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியில்.. பயிர்களுக்கான காப்பீடுகள் முறையாக வழங்கப்பட்டதோடு... இடுபொருள் நிவாரணங்களும் வழங்கப்பட்டதால் விவசாயிகள் நிம்மதியடைந்திருந்தனர்.... 

ஆனால் எப்போது திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதோ அன்றில் இருந்தே பயிர் காப்பீடும் கிடைக்காமல் இடுபொருள் நிவாரணமும் கிடைக்காமல் விவசாயிகள் கண்ணீர் கடலில் தத்தளிக்க கூடிய நிலையே இருந்து வருகிறது...  திமுக ஆட்சி பொறுப்பேற்ற முதல் ஆண்டே நெற்பயிர்களுக்கு பயிர்க்காப்பீடு கிடையாது என அறிவித்து விவசாயிகளின் தலையில் இடியை இறக்கியது விளம்பர அரசு.. இதனால் விவசாயிகள் பெரும் தவிப்புக்கு ஆளாகிய போதும் குறுவை பயிர்களுக்கான காப்பீட்டை அறிவிக்காமலேயே இருந்தது விளம்பர திமுக அரசு.. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளிலும் குறுவை நெல் சாகுபடிக்கான பயிர் காப்பீட்டு திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தவே இல்லை. இதனால் காப்பீடு கோரி விவசாயிகள் நீதிமன்றத்தை நாட வேண்டியது கட்டாயத்துக்கு ஆளாகினர். 

2023ம் ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.. அதை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்த நிலையில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் பல இடங்களில் நெற்பயிர் காய்ந்து கருகிபோனது. தென்மேற்கு பருவமழை பொய்த்து போனாலும் கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீர் குறுவை சாகுபடிக்கான ஆதாரமாக இருந்து வந்த நிலையில் கர்நாடகத்திடமிருந்து உரிய காவிரி நீரை பெற்றுத் தர விளம்பர திமுக அரசு தவறியதாலேயே வறட்சியால் நெற்பயிர் கருகி பெரும் இழப்பை சந்தித்தனர் விவசாயிகள்... ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் செலவு செய்தும் விவசாயிகள் பலர் நெற்பயிரை காப்பாற்ற முடியாமல் போயினர். இதற்கெல்லாம் காரணமாக இருந்தது விளம்பர திமுக அரசு.. 

விவசாயிகளின் நலனுக்காக மாபெரும் சட்டப்போராட்டத்தை நடத்தி காவரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பை பெற்றுத்தந்தது புரட்சித்தலைவி அம்மாவின் அரசு.. இதனால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் உரிய நேரத்தில் வந்து சேர்ந்தது... ஆனால் என்றைக்கு திமுக ஆட்சிகட்டிலில் அமர்ந்ததோ அன்றில் இருந்தே காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது கர்நாடக அரசு...

பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய்  இழப்பீடு கேட்ட நிலையில் ஹெக்டேருக்கு 13 ஆயிரத்து 500 ரூபாயை இழப்பீடாக வழங்குவதாக திமுக அரசு அறிவித்ததன் போக்கு கடும் கண்டனத்துக்கு ஆளானது. குறுவை நெற்பயிர்களுக்கு தமிழக அரசு காப்பீடு வழங்கியிருந்தால், தண்ணீரின்றி கருகிய பயிர்களுக்கு காப்பீடு நிறுவனங்களிடமிருந்து ஏக்கருக்கு அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு கிடைத்திருக்கும். ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற உடனேயே நெற்பயிர்களுக்கு பயிர்க்காப்பீடு கிடையாது என விளம்பர திமுக அரசு அறிவித்ததால் அதுவும் கிடைக்காமல் நிற்கதியாய் தவிக்கவிடப்பட்டனர் விவசாயிகள்... இப்படி திமுக ஆட்சியில் விவசாயிகள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வரும் நிலையில் இந்த ஆட்சிக்கு முடிவுரை எழுதும் நாளுக்காக விவசாயிகளும் பொதுமக்களும் காத்திருப்பது தான் உண்மை நிலவரமாக உள்ளது... 

Night
Day