விழுப்புரம்: அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பணி நிரந்தரம் செய்யாமல் வஞ்சித்து வரும் திமுக அரசைக் கண்டித்து விழுப்புரத்தில் அரசு கலைக் கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கல்லூரியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஆயிரத்து 141 கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் உள்ளதாக கூறப்படுகிறது. தங்களை பணிநிரந்தரம் செய்யாமல் 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளதை கண்டித்தும் தமிழ்நாடு அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் நலச் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

varient
Night
Day