விழுப்புரம் மாவட்டத்தில் புதுச்சேரி சாராயம் குடித்த 7 பேரில் 5 பேர் டிஸ்சார்ஜ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், புதுச்சேரியிலிருந்து சாராயம் வாங்கி குடித்த 7 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 5 பேர் டிஸ்சார்ஜ் செய்யட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 8ம் தேதி முதல் இன்று வரை அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விக்கிரவாண்டி அடுத்த பூரிகுடிசை கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர், கடந்த 8ம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து புதுச்சேரியில் விற்கப்பட்ட சாராயத்தை வாங்கி அருந்தியுள்ளார். இதில், சக்திவேல், பிரபு உள்ளிட்ட 7 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ராஜா, சுரேஷ்பாபு, பிரபு உள்ளிட்ட 5 பேர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஸ் செய்யப்பட்ட நிலையில், பிரகாஷ், சக்திவேல் ஆகிய இருவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த கஞ்சனூர் போலீசார், சாராயத்தை விற்பனை செய்த பிரபு என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day