விளம்பரத்திற்காக திறக்கப்பட்ட குடிநீர் ஏடிஎம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் விளம்பர திமுக முதலமைச்சர் திறந்து வைத்த சுத்திகரிக்கப்பட்ட கட்டணமில்லா குடிநீர் ஏ.டி.எம்-மில் தண்ணீருக்கு பதிலாக காற்று தான் வருவதாக மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

சென்னையின் 50 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம் என்ற பெயரில் கட்டணமில்லா குடிநீர் தானியங்கி இயந்திரத்தை விளம்பர திமுக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் ஒரு பகுதியாக, சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம், கொடுங்கையூர், முத்தமிழ் நகர், வாசுகி நகர், பூங்கா சிட்கோ பகுதியில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தானியங்கி இயந்திரத்தின் குழாய்களில் தண்ணீர் வராததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பட்டனை அழுத்தினால் குடிநீருக்கு பதிலாக வெறும் காற்று தான் வருவதாக மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். மேலும், விளம்பர திமுக அரசு எடுத்து வரும் அனைத்து திட்டங்களும் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் நோக்கத்தில் இருப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வெறும் வெற்று விளம்பரத்திற்காக இந்த விளம்பர திமுக அரசு செயல்படுவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day