விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள் - புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு தேமுதிக சார்பில் அழைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி அழைப்பிதழை, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவிடம், கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் மற்றும் தேமுதிக துணைச்செயலாளர் எல்.கே. சுதீஷ் உள்ளிட்டோர் நேரில் வழங்கி அழைப்பு விடுத்தனர்.

மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் 28ம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அனுசரிக்கப்படுகிறது. கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் மற்றும் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் ஆகியோர் நேரில் சந்தித்து வழங்கினர். அப்போது, விஜயகாந்தின் மார்பளவு சிலையையும் நினைவுப் பரிசாக புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு வழங்கினர். இந்நிகழ்வில் தேமுதிக துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். 

Night
Day