விசிக பொதுக்கூட்டத்திற்கு நிதிகேட்டு மிரட்டல்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூரில் நிதி கேட்டு விசிகவினர் கடை ஊழியரை மிரட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்காக திருவாரூர் நகரின் பல பகுதிகளில் உள்ள கடைகளில் விசிகவினர் நிதி வசூலில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது கடை ஒன்றில் உரிமையாளர் இல்லை எனக் கூறி பெண் ஊழியர் பணம்தர மறுத்துள்ளார். இதையடுத்து உரிமையாளரை போனில் தொடர்பு கொண்டு விசிகவினர் பணம் கேட்டதற்கு தரமுடியாது என மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விசிகவினர், பொதுக்கூட்டத்தின் போது, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைப்போம் என கடை ஊழியரை மிரட்டியுள்ளனர். மேலும், சிசிடிவி காட்சிகளை வைத்து தங்களை ஒன்றும் செய்ய முடியாது எனக்கூறி விசிகவினர் அடாவடியில் ஈடுபடும் வீடியோ வெளியாகி காண்போரை அதிர செய்துள்ளது.

Night
Day