வண்டை விழுங்கிய குழந்தை மூச்சுத்திணறி பலி

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் அருகே, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் மூச்சுக்குழாயில் வண்டு சிக்கியதால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தாமரைப்பாக்கம் சக்தி நகரில் வசிப்பவர் கார்த்திக். இவரது ஒரு வயது பெண் குழந்தை குகஸ்ரீ. கடந்த 23ம் வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக தரையில் இருந்த வண்டை எடுத்து விழுங்கியதாக தெரிகிறது. இதனையடுத்து தொடர்ந்து அழுது கொண்டே இருந்த குழந்தை திடீரென மயக்கமடைந்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் குழந்தையின் உடலை உடற்கூறாய்வு செய்த போது, மூச்சுக் குழாயில் வண்டு இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day