வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்பம் இயல்பைவிட மிக அதிகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் இயல்பை விட 3 முதல் 4.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், வட தமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இயல்பை விட வெயில் மிக அதிகமாக இருந்ததாகவும், கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மற்றும் தருமபுரி மாவட்டங்களில் வெப்ப அலை வீசியதாகவும் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 10 இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40  42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர் மற்றும் சேலத்தில் 41.6 டிகிரி செல்சியஸும், வேலூரில் 41.3 டிகிரி செல்சியஸும், நாமக்கல்லில் 41 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. தருமபுரி மற்றும் திருச்சியில் 40.7 டிகிரி செல்சியஸும், திருத்தணியில் 40.4 டிகிரி செல்சியஸும், தஞ்சாவூர் மற்றும் கரூர் பரமத்தியில் 40 டிகிரி செல்சியஸும் வெயில் பதிவாகியுள்ளது. 

Night
Day