ரேஷன் கடை பணியாளர் - மக்களிடையே வாக்குவாதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கரூரில் ரேஷன் கடையில் விற்பனையாளர் இல்லாததால் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள், ரேஷன் கடை பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காந்திகிராமம்  பகுதியில் உள்ள ரேசன் கடையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர். கடந்த ஓராண்டாக ரேசன் கடை வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படுவதாகவும் டிஜிட்டல் குறைபாடு, ஆட்கள் பற்றாக்குறை, பொருட்கள் கையிருப்பு இல்லை என காரணம் சொல்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் பொருட்களை வாங்க வந்தபோது விற்பனையாளர் இல்லை என்பதால் பொருட்கள் வழங்க இயலாது என ஊழியர் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Night
Day