ரவுடிசத்தை ஒழிக்க முன்னுரிமை - காவல் ஆணையர்

எழுத்தின் அளவு: அ+ அ-

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே சாதிய கொலைகள் மற்றும் அரசியல் கொலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மது மற்றம் கஞ்சா போதையிலும் இளைஞர்கள் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர். இதனால் சட்ட ஒழுங்கு சீர்கெட்டதாக அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில்,  கடந்த 5ம் தேதியன்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கட்சி தொண்டர்கள் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதைடுத்து சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

காவல் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட அருண் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ரவுடிகளை கட்டுப்படுத்துவதே தனது முதல் பணியாக இருக்கும் என தெரிவித்தார். ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Night
Day