ரயில் விபத்தின் போது என்ன செய்வது - மீட்பு ஒத்திகை

எழுத்தின் அளவு: அ+ அ-


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே துறை சார்பில் ரயில் விபத்து ஏற்பட்டால் பயணிகளை பாதுகாப்பாக மீட்பது குறித்த ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. தடம் புரண்ட ரயில்களில் உள்ள பயணிகள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிப்பது போன்ற ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில்  சென்னை மண்டல ரயில்வே பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்புத் துறையினர், ரயில்வே போலீசார் ஆகியோர் தத்ரூமாக ஒத்திகையை செய்து காண்பித்தனர்.

Night
Day