மெரினா லூப் சாலையில் மீனவ மக்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை லூப் சாலையில் பொது போக்குவரத்தை தடை செய்து மீனவர்கள் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நொச்சிக்குப்பம், டுமிங் குப்பம், முள்ளிமா நகர், சீனிவாசபுரம் உள்ளிட்ட 9க்கும் மேற்பட்ட மீனவர் கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். இதே பகுதியில் கடலில் மீன் பிடித்து விற்பனை செய்து தங்களது வாழ்வாதாரத்தை நகர்த்தி வருகிறார்கள். இந்நிலையில் லூப் சாலையை பொது போக்குவரத்தாக மாற்றியதால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே லூப் சாலையில் பொது போக்குவரத்தை தடை செய்து சாந்தோம் சாலை வழியாக அனைத்து வாகனங்களும் இயக்கப்பட வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் லூப் சாலையை மீனவர்கள் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் லூப் சாலையில் பேரணி நடத்தியும், தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் லூப் சாலையில் இன்று காவல்துறையினர்  பொது போக்குவரத்தை தடை செய்து சாந்தோம் சாலை வழியாக அனைத்து வாகனங்களையும் திருப்பி அனுப்பினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மீனவ மக்கள், தமிழக அரசு மீனவ மக்களுக்கு எந்த வித பயனும் அளிக்காத திட்டங்களை செயல்படுத்த முனைப்பு காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதத்திலும் மீனவ மக்களுக்கு பயனளிக்கும் வகையில் எந்தவித அறிவிப்பும் இடம் பெறவில்லை எனவும் மீனவர்களை ஏமாற்றும் அறிவிப்பே இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Night
Day