முன்னாள் கழக நிர்வாகி இல்லத்திருமண விழா - மணமக்களை வாழ்த்திய புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, பூந்தமல்லி முன்னாள் நகரக் கழக செயலாளர் பூவை.கந்தன் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு, மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். புரட்சித்தாய் சின்னம்மா, நிகழ்ச்சிக்கு செல்லும் வழியிலும், திருமண மண்டபத்திலும், எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பூந்தமல்லி முன்னாள் நகரக் கழக செயலாளர் பூவை.து.கந்தனின் மகள் மதுமிதா - தி. சுரேஷ் குமார் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா, சென்னை வானகரத்தில் உள்ள J.C. கார்டனில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சென்னை போயஸ் கார்டனில் புதிதாக அமைந்துள்ள, ஜெயலலிதா இல்லத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். மதுரவாயல் பகுதியில், முக்குலத்தோர் தேவர் சங்கம் சார்பில், அதன் தலைவர் எம். சாத்தையா தலைமையில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சங்கத்தின் துணைத்தலைவர் R.செல்வம், செயலாளர் சு. ஸ்ரீனிவாசன், பொருளாளர் சுரேஷ்குமார், உறுப்பினர்கள் கணேசன், பாலமுருகன், சண்முகராஜன், LIC திலகர்,  M.ராமு, ஜவஹர், சரவணன், சங்கர், பாண்டியன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு, பட்டாசுகள் வெடித்தும், மலர் தூவியும் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். 

புரட்சித்தாய் சின்னம்மா, தாயுள்ளத்தோடு, சிறார், சிறுமியருக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார். 

இதனைத்தொடர்ந்து, திருமண மண்டபத்திற்கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, பட்டாசுகள் வெடித்தும், மேளதாளங்கள் முழங்கவும், கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

மணக்கள் மதுமிதா, சுரேஷ்குமார் ஆகியோருக்கு, புரட்சித்தாய் சின்னம்மா, தனது திருக்கரங்களால் மாலை எடுத்துக் கொடுத்தும், மலர்தூவி ஆசீர்வாதம் செய்தும், பூங்கொத்துகள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார். மணமக்கள் இருவரும் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் ஆசி பெற்றனர். திருமண வீட்டார் சார்பாக, புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

புரட்சித்தாய் சின்னம்மா, திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்லும்போதும், நிகழ்ச்சிக்குப் பின்னர், திரும்பி வரும் வழியிலும் ஏராளமான பெண்களும், பொதுமக்களும், புரட்சித்தாய் சின்னம்மாவை மகிழ்ச்சியுடன் வரவேற்று, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு வாழ்த்து பெற்றனர். புரட்சித்தாய் சின்னம்மா, தாயுள்ளத்தோடு, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழக அரசு முன்னாள் தலைமைக் கொறடா பி.எம்.நரசிம்மன், முன்னாள் அமைச்சர் எம்.ஆனந்தன், வேலூர் மாவட்ட கழக முன்னாள் செயலாளர் L.K.M.B. வாசு, திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் வி.ஆர்.வெண்மதி, மதுரவாயல் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஆலப்பாக்கம் ஜீவானந்தம்,  திருவள்ளூர் வடக்கு மாவட்ட MGR இளைஞரணி தலைவர் எல்லாபுரம் எல். ரஜினி, திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய கழக செயலாளர் பெரியசெவலை ஜெ.குமார், பரங்கிமலை முன்னாள் ஒன்றியக் கழக செயலாளர் மேடவாக்கம் S.காளிதாஸ், தென்சென்னை மாவட்ட கழக துணைச் செயலாளர் வேளச்சேரி S.சின்னதுரை, திண்டிவனம் முன்னாள் நகர கழக செயலாளர் திண்டிவனம் சேகர், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் என். கோபால், விருகை பகுதி மகளிர் அணி செயலாளர் ஸ்ரீதேவி பாண்டியன், செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி எஸ்.எஸ்.சூரியா, கழக நிர்வாகிகள் லைலாண்ட் குணசேகரன், நாரையூர் மணிகண்டன், ராயபுரம் மதில் பெருமாள், திருவள்ளூர் அடைக்கலம், எல்ஐசி திலகர், நாமக்கல் பாண்டியன், குரோம்பேட்டை சக்திவேல், மறைமலைநகர் புவனேஷ்வரி நாச்சியார் மற்றும் ஏராளமான கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Night
Day