எழுத்தின் அளவு: அ+ அ- அ
தூத்துக்குடியில் உள்ள தனியார் ஐஸ் கட்டிகள் உற்பத்தி ஆலையிலிருந்து இரவு நேரம் அமோனியா வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
குரூஸ்புரம் பகுதியை சேர்ந்த ஒயிட் என்பவர் கீழ அலங்காரதட்டு பகுதியில் ஐஸ் கட்டிகள் உற்பத்தி ஆலை வைத்து நடத்தி வருகிறார். 10 வருடங்களாக இயங்கி வரும் இந்த ஆலையில் கடந்த 3 மாதங்களாக முறையாக பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி அமோனியா வாயு வெளியேறி வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு அதிகளவு அமோனியா கேஸ் வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் பரவியது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுதிணறல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் அமோனியா வாயுவை மேலும் பரவாமல் தடுத்தனர். மூச்சுத் திணறலால் அவதியடைந்த மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஐஸ் கட்டிகள் உற்பத்தி ஆலையை மூடவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.