எழுத்தின் அளவு: அ+ அ- அ
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளின் ஆரம்ப சுகாதார தேவையை பூர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டு, புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 'அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்' திட்டம் தற்போது திமுக ஆட்சியில் முற்றிலும் முடங்கிக்கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அக்குழந்தையை சிறப்பான முறையில் பராமரிக்கும் பொருட்டு புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் 'அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்' திட்டம்..!
தற்போதைய சூழலில் குழந்தையை பிரசவிப்பதற்கே பல லட்சங்கள் தேவை என்ற நிலையில் மூன்று வேளை உணவுக்கே சிரமப்படும் எத்தனையோ ஏழை குடும்பங்களின் தம்பதிகள் குழந்தை பேறுக்கு அரசு மருத்துவமனைகளை நம்பியே இருக்கின்றனர். ஆனால் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளை ஆரோக்கியமாகவும் சுகாதாரமான முறையிலும் பாதுகாக்க வேண்டியது மிக அவசியம் என்ற நிலையில் பிறக்கும் குழந்தைகளை பராமரிப்பது ஏழை பெற்றோருக்கு பெரும் சிரமமாகவே இருந்தது. சுகாதாரமற்ற சூழலால் குழந்தைகள் நோய்வாய் படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். இதனால் குழந்தை பெற்றெடுப்பதையே தள்ளிவைக்கும் முடிவுக்கு பல ஏழை தம்பதிகள் தள்ளப்பட்டனர்..
இப்படியிருக்கையில் ஏழை பெற்றோர்களுக்கான மாபெரும் வரப்பிரசாதமாக அமைந்தது புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 'அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்' திட்டம்.. புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை பொருட்களை வழங்குவதன் மூலம் குழந்தைகளின் நலனை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது..
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ‘அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்’ திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு தொடங்கி வைத்து, ஏழை தம்பதிகளின் வாழ்வில் ஒளியை ஏற்றிவைத்தார் மாண்புமிகு அம்மா...
அதன்படி, குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்கு தேவையான துண்டு… குழந்தைகளுக்கான உடை.. குழந்தைகளுக்கான பிரத்தியேக படுக்கை… டெங்கு, மலேரியா போன்ற நோய்தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாத்திட கொசு வலை.. குழந்தைகளுக்கான டயப்பர்.. 100 மில்லி லிட்டர் அளவுடைய எண்ணெய் டப்பா… 6 மில்லி லிட்டர் அளவு கொண்ட குழந்தைகளுக்கான ஷாம்பு பாட்டில்.. நக வெட்டி… கிலுகிலுப்பை, பொம்மை போன்றவை ‘அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத்தில் வழங்கப்பட்டன…
அதுமட்டுமின்றி பச்சிளம் குழந்தைகளை நோய் கிருமிகள் தாக்காமல் இருக்க, சுத்தமான கைகளுடனேயே குழந்தைகளை பராமரிக்க வேண்டியது அவசியம் என்ற நிலையில் பிளாஸ்டிக் பாட்டிலில் 250 மில்லி லிட்டர் அளவு கொண்ட கை கழுவும் திரவமும் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத்துடன் வழங்கப்பட்டது… அதுமட்டுமா.. பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தாய்ப்பாலை அதிகரிக்கவும், 'சவுபாக்கியா' சுண்டிலேகியமும் வழங்கப்பட்டது. மேலும் தாய் மற்றும் பச்சிளம் குழந்தையை பராமரிக்க தேவையான, பொருட்களை வைத்துக் கொள்ள பிரத்தியேக பெட்டகம் என 16 வகையான, பொருட்கள்… ‘அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத்தில் வழங்கப்பட்டன..
பிறந்த முதல் நாளில் இருந்து 6 மாதம் வரை ஒரு குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்தும் தாய்ப்பாலில் இருந்தே கிடைக்கிறது… இதுவே குழந்தையின் எதிர்ப்பு சக்திக்கான அடிப்படை ஆதாரமாகவும் இருக்கிறது… அப்படியிருக்கையில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கிய தேவைகளையும் மிக நுணுக்கமாக ஆராய்ந்து, பிரசவித்த தாயின் தாய்ப்பாலை அதிகரிக்க லேகியம் வழங்கிய புரட்சித்தலைவி அம்மாவின் இத்திட்டம் இதுவரை வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படாத முன்னோடி திட்டமாகவே இருந்தது..
பச்சிளம் குழந்தைகளின் ஆரம்ப கால சுகாதார தேவைகளை பூர்த்தி செய்யும் இத்திட்டம் தாய்மார்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் விளம்பர திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே ‘அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் திட்டம் அடியோடு முடக்கப்பட்டு, புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது…
அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் திட்டம் முடக்கப்பட்டுள்ளதால் பச்சிளம் குழந்தைகளின் ஆரம்ப கால சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதோடு.. குழந்தைகளை பேணுவதில் ஏழை பெற்றோர் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது…
ஏற்கெனவே விளம்பர திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டிக்கொண்டிருக்க… ஏழை மக்களின் சுமையை குறைக்க புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகத்தான திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் விளம்பர திமுக அரசு தொடர்ந்து முடக்கி வருவது சாமானிய மக்களை பெரும் துயருக்கு தள்ளியிருக்கிறது..