மீனாட்சி அம்மன் கோவில் விழாவில் கணவரை இழந்தவர் செங்கோல் வாங்க கூடாதா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில் கணவரை இழந்தவர்கள் செங்கோல் வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில், சித்திரை விழாவில் செங்கோலை பெற்று கொள்ளும் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் கணவரை இழந்தவர். இதனால் செங்கோலை அவரிடம் வழங்காமல் தகுதியான நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி சரவணன், முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கணவனை இழந்தவர்கள் செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினர். மேலும். செங்கோல் வாங்குபவர்  இந்து தானே என தெரிவித்த நீதிபதி, நவீன காலத்திலும் இதுபோன்ற கருத்துகளை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும், கோவில் திருவிழா தொடங்கிய பின் இதுபோன்று மனு தாக்கல் செய்வது ஏற்புடையதல்ல எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Night
Day