மாஞ்சோலை எஸ்டேட் அடமானம் - நெல்லையில் சார்பதிவாளர் பணியிடை நீக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை எஸ்டேட்டை அடமானம் வைத்து 50 கோடி ரூபாய் கடன் பெற அனுமதித்த சார் பாதிவாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிங்கம் பட்டி ஜமீனிடம் இருந்து எஸ்டேட்டை 99 ஆண்டுகள் குத்தைக்கு  எடுத்த மும்பை பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம், அந்த நிலைத்தை தேயிலை தோட்டம் நடத்த மட்டுமே அனுமதி உள்ள நிலையில், சென்னையில் உள்ள ஹெச்டிஎப்சி வங்கியில் 50 கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளது. தற்போது அந்த நிறுவனம் நிலத்திற்கு உரிமை கொண்டாடும் நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசின் நில நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார். விசாரணையில், கல்லிடைக்குறிச்சி சார்பதிவாளர் சாந்தி அடமானம் வைக்க அனுமதி அளித்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை பணி இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டார். 

Night
Day