மருத்துவமனை முன்பு தேங்கிய மழைநீர்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அமைந்தகரையில் உள்ள அரசு சித்த மருத்துவமனை முன்பு மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளதால் சிகிச்சைக்காக சென்ற நோயாளிகள் மருத்துவமனை உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர். மேலும், சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அந்த சாலையில் சென்ற வாகனங்கள் பழுதாகி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மருத்துவமனைக்கு வந்த பெண்கள் சிலர், தங்களால் இந்த மழைநீரில் நடந்து செல்ல முடியவில்லை என்றும் தண்ணீர் முழங்கால் வரை உள்ளதால் கடும் அவதியடைவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

Night
Day