மயிலாடுதுறை: தலைவாரும் சீப்பை கொண்டு இசை கச்சேரி நடத்திய ஆசிரியர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை அருகே தலைவாறும் சீப்பை கொண்டு இன்னிசை கச்சேரி நடத்திய தமிழாசிரியரின் வியக்கத்தக்க வீடியோ சமூகதளங்களில் வைரலாகி வருகிறது. ஆத்துக்குடி ஊராட்சி தர்மநாதபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜான்சன். இவர் தலை வாறும் சீப்பை ஒரு காகிதத்தில் மடித்து வைத்து காதலுக்கு மரியாதை படத்தில் வரும் என்னை தாலாட்ட வருவாளா என்ற பாடலை இசையாக பாடி அசத்தி வருகிறார். இதனை அவருடன் பணியாற்றும் சக ஆசிரியர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Night
Day