மயிலாடுதுறை: ஆதரவற்ற முதியவருக்கு புதிதாக வீடுகட்டி கொடுத்த சமூக ஆர்வலர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை அருகே முதியவருக்கு வீடுகட்டி கொடுத்த சமூக ஆர்வலர், புதுவீட்டை முதியவரின் கையாலேயே திறந்துவைத்த நிகழ்வு காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பெரம்பூரை சேர்ந்த பாரதி மோகன், ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது அறக்கட்டளை மூலம் உதவி செய்து வருகிறார். இந்நிலையில் தரங்கம்பாடியை சேர்ந்த முதியவர் பாலசுந்தரம், சேதமடைந்த வீட்டில் இருப்பதை அறிந்து, தனது நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் உதவியுடன் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீட்டை கட்டி கொடுத்துள்ளார். மேலும் புதுவீட்டை முதியவரான பாலசுந்தரத்தின் கைகளினாலேயே திறக்க வைத்து நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார், பாரதி மோகன்.

Night
Day