மதுரை - பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை - பெங்களூரு இடையேயான வந்தே பரத் ரயில் சோதனை ஓட்டம் மதுரையிலிருந்து தொடங்கியது. 
விரைவில் மதுரை - பெங்களூரு இடையே இயக்கவுள்ள வந்தே பாரத் ரயிலை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த வந்தே பாரத் ரயில், மதுரையில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.15 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தை அடைகிறது. மறுமார்க்கத்தில் பிற்பகல் 1.45 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் புறப்பட்டு இரவு 10.25 மணிக்கு மதுரை வந்தடையும். இந்நிலையில் இன்று காலை 5:15 மணிக்கு மதுரையில் இருந்து வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனால், பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Night
Day