மதுரை வைகையாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை வைகையாற்றில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக புதிய மேம்பால பணிகள் நிறுத்தப்பட்டன.

மதுரை மாவட்டம் தமுக்கம் முதல் நெல்பேட்டை வரை கோரிப்பாளையம் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் நீர் திறக்கப்பட்ட நிலையில், மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றுக்குள் கட்டுப்பட்டு வந்த புதிய மேம்பால பணிகள் நிறுத்தப்பட்டு, ராட்சத இயந்திரங்களும், கட்டுமான பொருட்களும் அப்புறப்படுத்தப்பட்டன. சர்வீஸ் சாலையிலும் வெள்ளநீர் ஓடுவதால், போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளன. இதனால் கோரிப்பாளையம் முதல் சிம்மக்கல் வரையிலான பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

Night
Day