மக்கள் நீதி மைய பெண் நிர்வாகியை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது - 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மயிலாப்பூர் அருகே மக்கள் நீதி மைய பெண் நிர்வாகியை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். தகராறில் ஈடுபட்டு தாக்கிய பெண் நிர்வாகியை கைது செய்யாமல் தனது மகனை கைது செய்துள்ளதாக ஆட்டோ ஓட்டுநரின் தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயம் அருகே மக்கள் நீதி மைய மகளிர் அணி நிர்வாகி சிநேகா மோகன், வாடகை ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் பிரசாத்திற்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்ற ஆட்டோ ஓட்டுநரை சிநேகா மோகன் காலணியால் தாக்கியதுடன் ஆட்டோவின் சாவியையும் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. பதிலுக்கு ஆட்டோ ஓட்டுனரும் அவரை தாக்கியுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் ஆட்டோ ஓட்டுநர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும், சினேகா மோகன் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய ஆட்டோ ஓட்டுநரின் தாய் நவநீதம், உண்மைக்கு மாறாக போலீசார் தனது மகன் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். 

Night
Day